technology

img

'ரியல்மீ சி31' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் 

ரியல்மீ  நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ சி31' ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ’ரியல்மீ  சி31' ஸ்மார்ட்போன்  6.5 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை, டி612 புராசஸர், 3 ஜிபி ரேம்( 32 ஜிபி ஸ்டோரேஜ்), 4ஜிபி ரேம் (64 ஜிபி ஸ்டோரேஜ்), பின்பக்கம் 13 எம்பி அளவுள்ள மூன்று முதன்மை கேமரா, முன்பக்க 5 எம்பி அளவை கொண்ட  கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஒஸ் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

மேலும், இந்த 'ரியல்மீ சி31' ரேம் 3 ஜிபி ஸ்மார்போனின் (32 ஜிபி ஸ்டோரேஜ்) விற்பனை விலை ரூ.8,999 ஆகவும், ரேம் 4ஜிபி ஸ்மார்போனின் (64 ஜிபி ஸ்டோரேஜ்) விலை ரூ.9,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

;